பனிப்பாறையில் பாரிய பிளவு: வரப்போகும் பேராபத்து என்ன?

கிரீன்லாந்தில் மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று பிளவடைந்துள்ளதை, நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

கிரீன்லாந்தின் Peterman Glacier என்ற பனிப்பிரதேசத்திலேயே இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக செய்மதிப் படங்கள் மூலம் நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

கனடாவின் மேற்கே கிரீன்லாந்து உள்ளது. Petermann Glacier என்ற பகுதி கிரீன்லாந்தின் ஐஸ் வலயத்தையும், ஆர்டிக் சமுத்திரத்தையும் இணைக்கும் பனிமூடிய நிலப்பரப்பாக உள்ளது.

இது சுமார் 250 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. கடந்த 2010ஆம் ஆண்டு பீட்டர்மன் கிளாசியர் வெடிப்புக்குள்ளான போது 30 கி.மீ நீளமுடைய புதிய பனித் தீவு உருவாகி இருந்தது.

தற்போது திடீரென குறுகிய காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நாசாவின் எரிக் ரிஒங்னொட் என்ற ஆய்வாளர் கூறுகையில், இது வெடிப்பு அல்ல, வரப்போக்கு முக்கிய நிகழ்விற்கான அறிகுறி என்று தெரிவித்தார்.

டெலாவேர் பல்கலைக்கழகத்தின் ஆண்டிரியாஸ் முவென்சோ எனும் ஆய்வாளர் கூறுகையில், பீட்டர்மான் கிலாசியரில் நிகழும் மாற்றம் குறித்து 150 வருட ஆய்வறிக்கை எம்மிடம் உள்ளது.

ஆனால் இவ்வளவு பெரிய வெடிப்பு இதில் திடீரென ஏற்பட்டுள்தை எம்மால் நம்பமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மனிதச்செயற்பாடுகளினால், மிக வேகமாக புவி வெப்பமடைந்து வருகிறது. கிரீன்லாந்தின் பல பனிப்பாறைகள் உருகி உடைந்து வீழ்வதற்கும் காரணமாகிறது.

தற்போது ஏற்பட்டுள்ள பனிப்பாறை வெடிப்பு, கனடாவின் வடக்கு கப்பற்பாதையின் ஆபத்தை அதிகரிக்க செய்துள்ளது.

greenland_iceberg_002

greenland_iceberg_004

greenland_iceberg_005

Related posts:

20 நாளில் ரூ.43 லட்சத்துக்கு தொலைபேசி பே...
கல்யாணமான காதலியை மீண்டும் தன் வலையி...
திண்டுக்கல் அருகே 9ம் வகுப்பு மாணவனை ...

You must be logged in to post a comment Login

Go to Admin » appearance » Widgets » and move a widget into Advertise Widget Zone