லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய பாரம்பரிய நடனம்

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியப் பாரம்பரிய நடனமான கதக், பரத நாட்டியம், ஒடிசி, குச்சிபுடி, பாங்க்ரா, கரகம் ஆகிய நடனங்கள் இடம்பெறுகின்றன. இந்த குழுவுக்கு டீன் இந்தியா வேர்ல்ட் என்று பெயரிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

எதிர்வரும் 27ம் திகதி லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக துவங்குகிறது. இதில் ஒவ்வொருநாளும் போட்டித் துவங்குவதற்கு முன், பாரம்பரிய நடனங்கள் இடம்பெறும். அந்த வகையில் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களும் அரங்கேற இருப்பதாகவும், இந்த குழுவில் இடம்பெற்ற 16 வயதுக்குட்பட்டவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிகிறது.

ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனர் ஸ்ரீமதி இதுபற்றிக் கூறுகையில், “5 வளையங்கள் கான்செப்ட் இணைத்து நடனங்கள் அரங்கேற்றப்படும். இவ்வாறான பாரம்பரிய நடனங்களை ஒலிம்பிக் மேடையில் நடனமாட உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் 1000 பேருக்குத்தான் வாய்ப்புக் கிடைத்தது. அதில் நமது இந்தியாவுக்கும் கிடைத்தது பெருமை. 70 குழந்தைகள் அடங்கிய இந்த குழு லண்டனில் நம் பாரம்பரிய நடனத்தைப் பதிக்க இருக்கிறார்கள் என்றார்.

Related posts:

முள்ளிவாய்க்காலில் தடயங்களை அழிக்க ...
நடன நிகழ்ச்சியில் மனைவிகளை தேர்வு செ...
மாணவிகளுக்கு மதுபானம் வழங்கி குடிக்...

You must be logged in to post a comment Login

Go to Admin » appearance » Widgets » and move a widget into Advertise Widget Zone