8.7 மில்லியன் கைபேசி பாவணையாளர் தரவுகள் திருட்டு! | WINYARL

8.7 மில்லியன் கைபேசி பாவணையாளர் தரவுகள் திருட்டு!

Phone_hekkar_410px_29-07-12

8.7 மில்லியன் கையடக்கத் தொலைபேசி பாவணையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைக் களவாடிய (ஹெக்) இருவரை தென் கொரிய காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தென் கொரியாவின் இரண்டாவது மிகப்பெரிய கைபேசி சேவையை வழங்கும் நிறுவனத்திலிருந்து இந்தத் தரவுகளை சந்தேக நபர்கள் களவாடியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள் கடந்த பெப்ரவரி முதல் ஐந்து மாதங்கள் இந்தத் தரவுகளைத் திருடியுள்ளதாகவும், இவர்கள் பாவணையாளர்களின் பெயர், தொலைபேசி இலக்கம், முகவரி ஆகிய தரவுகளையே பெரும்பாலும் திருடியுள்ளனர்.

இந்தத் தரவுகளை தொலைபேசி சந்தைப்படுத்தல், விளம்பர தாரர்களக்கு வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த களவு குறித்து கடந்த 13ஆம் திகதி குறித்த சேவை வழங்கும் நிறுவனம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

Leave a Reply