21 ஆம் நூற்றாண்டு இறுதிக்குள் மனித இனம் வேற்றுக் கிரக வாசிகளுடன் நெருங்கிய சந்திப்பு

ஜேர்மனின் டப்ளின் நகரத்தில் சமீபத்தில் நடைபெற்ற யூரோசயின்ஸ் எனும் நிறுவனத்தின் திறந்தவெளி கருத்துக் கணிப்பின் போது ஜோசெலின்

பெல் பர்னெல் எனும் விஞ்ஞானி ஒருவர் இந்த (21 ஆம்) நூற்றாண்டு முடிவடைவதற்கு முன்னர் மனித இனம் வேற்றுக்கிரக வாசிகளுடன் நெருங்கிய சந்திப்பை மேற்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவர் மேலும் கூறுகையில் இவ்வெச்சரிக்கை திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல எனவும் உலகில் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அரசாங்கங்களுக்கு ஆனது எனவும் தெரிவித்தார். மேலும் மனித இனம் சந்திக்க நேரிடும் வேற்றுக் கிரக வாசிகள் மனிதனைப் போல் அல்லது மனிதனை மிஞ்சிய அறிவுத் திறன் உடையவையாகவோ அல்லது சாதாரண உயிரினங்களாகவோ இருக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் இவை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்படுமிடத்து உடனடியாக பொது மக்களுக்கு தெரிவிக்கப் பட அரசியல் காரணங்கள் தடை செய்யக் கூடும் என்பது வெளிப்படை. அவ்வாறு அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமிடத்து மக்கள் நம்பும் படி சொல்ல பத்திரிகையா,பிரத மந்திரியா, அரசியல் தலைவர்களா,பிரபலங்களா, அல்லது போப்பாண்டவரா தெரிவு செய்யப் படுவர் என்ற கேள்வியும் எழுகின்றது.

பிரிட்டனில் சுமார் 2000 மக்களுக்கிடையே ரோயல் சமூகம் நடத்திய கருத்துக் கணிப்பில் 44 வீதமானோர் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதை நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் போது பிரிட்டனின் மக்கள் தொகையில் அரைவாசிப் பேர் மிகச் சிறிய பச்சை நிற மனிதர்கள் ( வேற்றுக்கிரகவாசிகள்) பூமியில் மறைவாக உலாவுவதாக நம்பியிருந்தனர்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

You must be logged in to post a comment.