ஸ்வீட் அதிகம் சாப்பிடுவதை எப்படி நிறுத்தலாம்!!! | WINYARL

ஸ்வீட் அதிகம் சாப்பிடுவதை எப்படி நிறுத்தலாம்!!!

FML ALEX RENTON SWEETS FEATURE

இந்த உலகில் இனிப்பை விரும்பாதவர்கள் என்று எவரும் இருக்க முடியாது. அவ்வாறு அதிகமான அளவு இனிப்புகளை உண்டால், பேசாமல் அமைதியாக இருக்கும் சர்க்கரை நோயை வரவேற்பது போல் ஆகிவிடும். ஆகவே அத்தகைய இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு ஓய்வு எடுக்கும் நேரத்தில் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அதிலும் அப்போது கிரீம் பிஸ்கட் தான் அதிகம் சாப்பிடுவர். அவ்வாறெல்லாம் சாப்பிடாமல், இனிப்பான தின்பண்டங்களை சாப்பிடத் தோன்றும் போது, அதனை தவிர்த்து, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஒரு சில உணவுகளை சாப்பிடலாம் அல்லது பசியைத் தூண்டாத வகையில் இருக்கும் ஒரு சில செயல்களை செய்ய வேண்டும். அது எவ்வாறு என்று படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்…

உடலில் இருக்கும் சத்துக்களில் பற்றாக்குறை ஏற்பட்டால் தான், பசி ஏற்படும். மேலும் எப்போதெல்லாம் இனிப்பு சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றுகிறதோ, அப்போதும் பசி ஏற்படும். ஆனால் உண்மையில் அவ்வாறு பசி ஏற்படுவதற்கு புரோட்டீன் குறைபாடு ஆகும். அவ்வாறு பசி ஏற்பட்டால், புரோட்டீன் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். அதிலும் இந்த நேரத்தில் பதப்படுத்தப்பட்ட பாலால் ஆன உணவுப் பொருட்களை உண்பதை விட, முட்டை, சிக்கன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் எப்போதும் பசி ஏற்படாமல் இருப்பதோடு, இனிப்பை சாப்பிட வேண்டும் என்ற நினைத்தாலும் சாப்பிட முடியாது.

வீட்டில் இருக்கும் போது தெருவில் பல இனிப்பு பண்டங்களை விற்றுக் கொண்டு செல்வார்கள். அப்போது எந்த ஒரு வேலையும் இல்லாமல் வீட்டில் படுத்துக் கொண்டு இருக்கும் போது, அதனை வாங்கி சாப்பிடலாம் என்று தோன்றும். ஆகவே அப்போது எண்ணத்தை அதன் மேல் செலுத்தாமல், ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடலாம். உதாரணமாக வாக்கிங், ஜாக்கிங், படம் பார்த்தல், புத்தம் படித்தல் போன்றவாறு கவனத்தை திசைத் திருப்பலாம்.

இல்லை எதாவது சாப்பிட்டாக வேண்டும் என்று இருப்பவர்கள், அந்த நேரத்தில் சுவையான பழங்களை வாங்கி சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் கூடாமல் இருக்கும்.

இரத்ததில் சர்க்கரையின் அளவு குறைவாக இருந்தாலும் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அப்போது இத்தகைய பசியை சரிசெய்ய, காலை வேளையில் உண்ணும் உணவில், சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும் உணவுகளை உண்ணலாம். அதிலும் தானியங்கள், செயற்கை முறையில் தயாரிக்கும் இனிப்பான உணவுப் பொருட்கள் போன்றவற்றை தவிர்த்து, சிவப்பு அரிசி, புரோட்டீன் நிறைந்த உணவுகள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை உண்ணலாம். முக்கியமாக மதிய வேளையில் 3 மணிக்கு முன்பு இனிப்புகள் உண்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் நாள் முழுவதும் பசித்துக் கொண்டே இருக்கும். காய்கறிகளால் ஆன ஜூஸ் வேண்டுமென்றால் சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எந்த ஒரு நோயும் உடலைத் தாக்காமல் இருக்கும்.

Leave a Reply