யாழ். அரியாலையில் ஆணொருவர் சடலமாக மீட்பு

யாழ். அரியாலை பகுதியில் வீதி விபத்து ஒன்றில் இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஆணொருவரின் சடலத்தை யாழ். பொலிஸார் நேற்று அதிகாலை மீட்டுள்ளனர்.

குறித்த ஆண் வீதியில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் வந்த வாகனம் அவர் மீது மோதியதால் இவ்வுயிரிழப்பு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மீட்கப்பட்ட ஆணின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Pin It

Leave a Reply