யாழ். அச்சுவேலியில் இருவரைக் காணவில்லை

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் நேற்று முன்தினம் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் அவரது உறுப்பினர்களால் முறைப்பாடு செய்யப்பட் டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் போன இருவரில் ஒருவர் யாழ். அச்சுவேலி பகுதியைச் சேர்ந்தவரெனவும் மற்றவர் கொழும்பு பிட்டகோட்டே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தத போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Pin It

Leave a Reply