யாழில் பாடசாலை முன்பாக நின்று மாணவிகளுக்கு கேலி செய்வோர் மீது கடும் நடவடிக்கை | WINYARL

யாழில் பாடசாலை முன்பாக நின்று மாணவிகளுக்கு கேலி செய்வோர் மீது கடும் நடவடிக்கை

Jaffna_40

பெண்கள் பாடசாலை முன்னால் நின்று மாணவிகளுக்கு பகிடி , சேஷ்டை விடுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைஞர்கள் மீது பொலிசார் யாழ். குடா நாட்டில் பரவலாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்கள்

யாழ். மாவட்டப் பெண்கள் பாடசாலைகளின் முன்னால் காலையிலும் மாலையிலும் குறிப்பி;ட்ட இளைஞர்கள் நின்று மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொள்வதாக ஊடகவியலாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.

வாரந்தம் ஊடகவியலாளர்களுக்கும் யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த தகவல் முன் வைக்கப்பட்டது.

பொலிஸ் மா அதிபர் இதனைக்கேட்டு அனைத்துப் பொலிஸ் பிரிவில் உள்ள பெண்கள் பாடசாலை சுற்றுப் புறங்களில் பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தின்மூலம் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply