மருமகளை தூக்கிச் சென்று பலாத்காரம் செய்த மாமனார் கைது!

திருமணமான 28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அந்தப் பெண்ணின் மாமனார் ஒருவரை தமபகல்ல காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சந்தேக நபர் மருமகளை பலாத்காரமாக தூக்கிச் சென்று, வாயில் துணியை அடைத்து, கொலை செய்வதாக அச்சுறுத்தி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் 38 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், பல்லேபெத்த பிரதேசத்தில் திருமணம் செய்த பெண்ணே இவ்வாறு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

விசாரணைகளை காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Pin It

Leave a Reply