செய்தி
நிர்வாண நிலையில் 2 பெண்கள், ஒரு ஆணுக்கு கழுத்தில் வெட்டு-ஒரு பெண் பலி!
[ ஞாயிற்றுக்கிழமை, 01 யூன் 2014, 01:40.30 PM GMT ]

அரக்கோணத்தில் ஒரு வீட்டில் அந்த வீட்டைச் சேர்ந்த பெண் மற்றும் வேறு ஒரு பெண், ஒரு ஆண் ஆகியோர் சரமாரியாக வெட்டப்பட்டனர். அதில் ஒரு பெண் உயிரிழந்தார். மற்ற இருவரும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

காதல் விவகாரம் அல்லது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதில் ஒரு ஜோடி நிர்வாண நிலையில் படுக்கை அறையில் கிடந்தது. ஆனால் இவர்கள் கணவன் மனைவி இல்லை என்று கூறப்படுகிறது.

அரக்கோணம் அதாவுல்லா தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன், ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மகள் ஷர்மிளா . 24 வயதாகிறது. இவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக பெற்றோர் வெளியூர் போயிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை தீனதயாளன் வீட்டு குளியலறை வென்டிலேட்டரிலிருந்து புகை வந்தது. இதைப் பார்த்த வீட்டின் மேல் பகுதியில் வசித்து வந்த தீனதயாளனின் உறவினர் விரைந்து வந்து எட்டிப் பார்த்தார். அப்போது ஷர்மிளா கழுத்து, தலையில் வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினரை திரட்டிக் கொண்டு உள்ளே புகுந்து ஷர்மிளாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த நிலையில் அடுத்த அரையில் முனகல் சத்தம் கேட்கவே அங்கு போய்ப் பார்த்தனர். அப்போது அங்கு நிர்வாண நிலையில் ஒரு ஆணும், பெணும் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களது தலையிலும் வெட்டுக் காயம் இருந்தது.

உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே வீட்டில் அந்த வீட்டுப் பெண், நிர்வாண நிலையில் இன்னொரு பெண், ஆண் ஆகியோர் வெட்டுப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிர்வாண நிலையில் கிடந்தது மாதவன் மற்றும் ஆஷா என்பது தெரிய வந்தது. இருவரும் கணவன் மனைவி போலத் தெரியவில்லை. ஆனால் ஆஷாவுக்கு திருமணமாகி விட்டது. ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆஷா பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மற்ற இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஏன் வெட்டப்பட்டார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related posts:

This entry was posted in இந்தியா, செய்திகள். Bookmark the permalink.

Leave a Reply

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 06-02-2014 23:23:25 ]
09-surya3-300
ஒரு படம் ஹிட் அடித்து விட்டால், தனது சம்பளத்தை உயர்த்திக் கொள்வது திரை நட்சத்திரங்களுக்கு வழக்கமாகிப் போய்விட்டது. அதுமட்டுமின்றி சில நடிகர்கள் சம்பளத்துடன் சில ஏரியாக்களின் விநியோக
[ Saturday, 23-11-2013 23:57:48 ]
[ Wednesday, 20-11-2013 9:16:53 ]
[ Wednesday, 20-11-2013 9:14:21 ]
[ Sunday, 01-06-2014 13:31:23 GMT ]
சிரியா நாட்டின் உள்நாட்டுப் போரில், 900 வருட நினைவுச் சின்னமாக இருந்த சிரியாவின் கோட்டை “THE CRAC DES CHEVALIERS” என்று அழைக்கப்பட்ட நினைவு சின்னம் அழிக்கப்பட்டு வருகின்றது.
[ Sunday, 01-06-2014 13:01:03 GMT ]
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு வியாபாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
[ Sunday, 01-06-2014 14:47:23 GMT ]
பெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.  
[ Sunday, 01-06-2014 05:55:13 GMT ]
கூகுளின் அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படக்கூடிய மொபைல் சாதனங்களுக்கான GO Launcher EX அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.
[ Sunday, 01-06-2014 18:42:39 GMT ]
ஆரியா தாஸ் அவர்களின் வெளிவரவிருக்கும் திஸ் டியூன் ஈஸ் சிக் என்கின்ற ஆங்கில பாடல் ஆல்பத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 05-09-2012 1:25:59 ]
mahilvithu-mahil-jothidam
மேஷம் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். அடுத்தவர்களின்