திருமணமான மகளை நிர்வாணமாக்கி துன்புறுத்திய நபருக்கு 3 மாத சிறை

திருமணமான  தனது மகளை நிர்வாணப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட நபர் ஒருவர் ஒருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ண நேற்று 3 மாத சிறைத்தண்டனையும் 1500 ரூபா அபராதமும் விதித்தார்.

கொழும்பு கொம்பனித்தெருவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதவான் உத்தரவிட்டார்.

திருமணமான மேற்படி பெண், தன்னை தனது தந்தை நிர்வாணமாக்கி துன்புறுத்துவதாக கொம்பனித் தெரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Pin It

Leave a Reply