சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை

சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க வேணடுமென சிறுவர் அபிவிருத்தி மற்றம் மகளிர் விவகார அமைச்சு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கிலேயே இப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முன்வைத்த இப் பரிந்துரையை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் அதிகார சபையின் தலைவி சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுவர்களை கடத்துதல், துஷ்பிரயோகங்களுக்கு உள்ளõகும் நபர்கள் அல்லது குழுக்கள் மற்றும் பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் நபருக்கே இவ்வாறான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். அத்தோடு பிணை பெற்றுக் கொள்வதை தடுப்பதற்கு பிணை வழங்கும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் சமூகத்தில் தெளிவுபடுத்தல்களையும் விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தும் திட்டங்களை நாடு பூராகவும் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

You must be logged in to post a comment.