இன்றைய பலன்கள் (29.07.2012) | WINYARL

இன்றைய பலன்கள் (29.07.2012)

mahilvithu-mahil-jothidam

மேஷம்:

இன்று, பல்வேறான சிந்தனைகள் மனதில் நிலவும். பணம் சம்பந்தப்பட்ட காரியங்களில், கவனம் கூடுதலாக இருக்கட்டும். எதிர்பார்க்கும், சில உதவிகள் தாமதமான போதும் கிடைக்கும். இல்லறத் துணையின் அவசரமான செயல்பாடுகள், அதிகம் யோசிக்க வைக்கும். பெற்றோரின் அரவணைப்பு மன மகிழ்ச்சி அளிக்கும்.

ரிஷபம்:

இன்று, புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுதல் நலன் தரும். இன்றைய காலை பொழுதில், வேலைகளை விரைவாக முடித்த போதும், மனதிருப்தி என்பது சற்று குறைவாக இருக்கும். வீடு சம்பந்தப்பட்ட பணிகளிலும் தங்கள், கவனம் இருக்கட்டும். திட்டமிட்ட பயணம் ஒன்றை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.

மிதுனம்:

இன்று தன்னம்பிக்கை, விடாமுயற்சி அதிகரிக்கும் நாள். புதிய நபர்களின் சந்திப்பு, அவர்களால், சில காரியங்களை எளிதாக சாதித்து கொள்ளுதல் என்ற அளவில் இன்று இருக்கும். பண வருமானத்தை கூடுதலாக்க சிந்தனை ஏற்படும். சில விஷயங்களில் நெருங்கிய நபர்களின் செயல்பாடுகள் அதிகம் யோசிக்க வைக்கும், பெரிதுபடுத்திக் கொள்ளாதீர்கள்.

கடகம்:

இன்று, எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். சிக்கனம் அவசியம். இல்லறத் துணையின் யோசனைகள் மிகச் சரியாக இருந்தபோதும், ஏற்றுக்கொள்ள தங்கள் மனம் இடம் கொடுக்காது. அலுவலக பணிகளில், தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளுங்கள். தொழில் ரீதியாக, முக்கிய முடிவுகள் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

சிம்மம்:

இன்று, நண்பர்களின் செயல்கள் அதிகம் யோசிக்க வைக்கலாம். இருப்பினும், எதையும் பெரிது படுத்திக் கொள்ளாதீர்கள். சில விவகாரங்களில், தங்களின் யோசனைப்படி நடப்பது நல்லது. உறவினர் ஒருவர் கொடுத்த வாக்கை காப்பாற்றததால், மனக்கஷ்டம் ஏற்படும். மாலைக்கு மேல் நல்ல தகவல், தங்களை உற்சாகப்படுத்தும்.

கன்னி:

இன்று, செயல்களில் வெற்றி பெற தகுந்த சூழ்நிலை இல்லாத போதும், சற்று பொறுமையுடன் முயற்ச்சியை தொடர்ந்தால், வெற்றிக்கு வழிவகுக்கும். ஒரு காரியத்துக்காக எடுத்து வைக்கப்பட்ட தொகை ஒன்றை, மற்றொரு காரியத்துக்காக பயன்படுத்துவீர்கள். உத்தியோக ரீதியாக மேலதிகாரிகள் பாராட்டுக்குள்ளாவீர்கள்.

துலாம்:

இன்று, தங்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் கூடுதலாகும். வாழ்க்கை வளம் பெறும் வகையில், சில பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும் நன்னாள் ஆகும். எதிர் பார்த்த வரவுகள் வரும். அலுவலக பணியாளர்களுக்கு, நிர்வாகத்தின் செயல்பாடுகள் அதிகம் யோசிக்க வைத்தபோதும், விமர்சனம் செய்யாதீர்கள்.

விருச்சிகம்:

இன்று, தங்களின் சாதுர்யமான நடவடிக்கைகள் எதிர்பார்த்த வெற்றியைத் தரும். பணம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, வரவேண்டிய பணம் கைக்கு வரும். தாங்கள் சந்திக்க நினைத்த நபர்கள், அவர்களே, தங்களை சந்திக்கும் படியான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவார்கள். கடித தொடர்புகள் மனமகிழ்ச்சியை கொடுக்கும்.

தனுசு:

இன்று, கவுரவத்திற்காக சில விஷயங்களில் ஈடுபடுவீர்கள். சில நேரங்களில், தனக்கு மிஞ்சி எதுவும் இல்லை என்ற சிந்தனையும் மேலோங்கி நிற்கும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதால் வீண் அலைச்சல், விரயங்கள் ஏற்படும். பணநிலையில் அலைச்சலுக்குப்பின் வரவுகள் ஏற்படும். மாமன், மைத்துனர் வகையில் உதவிகள் கிடைக்கும்.

மகரம்:

இன்று, தங்களின் சுயசிந்தனைகளால், சில ஆதாயங்களை தேடிக்கொள்வீர்கள். சிறு கடன் ஒன்று அதிகம் யோசிக்க வைக்கும். உடல்நிலையில் சோர்வு ஏற்படலாம். சில சந்திப்புக்கள் மற்றும் புதிய அறிமுகங்களை பயனுள்ளதாக்கி கொள்வீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களை முடிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்வீர்கள்.

கும்பம்:

இன்று, மாற்றங்களை எதிர்நோக்கி, தங்களின் செயல்பாடு இருக்கும். அதற்கான சூழ்நிலைகளும் கூடிவரும். குடும்ப விஷயங்களில் இல்லறத் துணையின் பிடிவாதமான போக்குகள் தங்களை அதிகம் யோசிக்க வைக்கும். பணவரவுகள் வந்தபோதும், பற்றாக்குறை நிலை நிலவும். தொழில் ரீதியான பயணங்கள் இருக்கும்.

மீனம்:

இன்று, எண்ணங்கள் ஈடேறும். முயற்சிகளில் லாபத்துடன் கூடிய வெற்றி உண்டு. உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, சில ஏற்பாடுகள் மேற்கொள்வீர்கள். தொழில் துறையில் ஸ்திரமான முன்னேற்ற வாய்ப்புகள் ஏற்படும். மாலையில் விரும்பிய தெய்வ வழிபாடு ஒன்றை மேற்கொள்வீர்கள்

Leave a Reply