இன்றைய பலன்கள் (19.07.2012) | WINYARL

இன்றைய பலன்கள் (19.07.2012)

mahilvithu-mahil-jothidam

மேஷம்:

இன்று, சிலரின் சந்திப்புகள் அதிகம் யோசிக்க வைக்கும். தொழில் சிந்தனை கூடும். விட்டுப் போன தொடர்புகளை புதுப்பித்து கொள்வீர்கள். தேங்கி கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். வாங்கிய கடனை தீர்ப்பதற்கான வழி காண்பீர்கள். குழந்தைகளுக்காக சில செலவுகளை மேற்கொள்வீர்கள். உற்றார், உறவினர் பகை அகலும்.

ரிஷபம்:

இன்று, எதிர்ப்புகள் மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். மனதில் புத்துணர்ச்சி உருவாகும். சிந்தனை தெளிவாகி, தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபங்கள் கூடும். எதிர்பார்க்கும் தகவல்கள் சற்று தாமதமாகும். அலுவலக பணிகளில் வீண்பேச்சுக்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மிதுனம்:

இன்று, சில பணிகளில் உடன்பாடு இல்லாதபோதும், எடுத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் குழப்பங்கள் தீர்ந்து நிம்மதி காணப்படும். எதிர்பார்க்கும் கடன் சற்று தாமதமாகும். தொழில் ரீதியான பயணங்கள் இருக்கும்.

கடகம்:

இன்று, சில காரணங்களால் எதிலும் பிடிப்பற்ற மனநிலையோடு காணப்படுவீர்கள். சற்று மாற்றிக்கொள்ளுங்கள். நண்பர்களின் மத்தியில் வேடிக்கையான பேச்சுக்கள் அதிருப்தியை ஏற்படுத்தலாம் கவனம். குழந்தைகளால் சிறுசிறு தொல்லைகளை சந்திக்கலாம். தொழிலில் மாற்றமான நிலைமை காணப்படும்.

சிம்மம்:

இன்று, தெய்வ சிந்தனை கூடும். தொடர் கதையாய் வந்த துன்பங்களுக்கு தீர்வு காண்பீர்கள். தொழிலில் சில இடர்பாடுகள் ஏற்பட்ட போதும், தங்களின் சாதுர்யமான செயல்பாடுகளால் பாதிப்பற்று கொண்டு செல்வீர்கள். நீண்டநாள் பாக்கி ஒன்று வசூலாகும். பெண்களால் அன்பு தொல்லைகளுக்கு ஆளாகுவீர்கள்.

கன்னி:

இன்று, தொழில் ரீதியாக புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். கூடவே வெற்றியா, தோல்வியா என்ற சிந்தனையும் நிலவும். அதை தவிர்த்து நம்பிக்கையோடு செயல்படுங்கள். குடும்பத்தில், சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதார நிலைமை சீராக இருக்கும்.

துலாம்:

இன்று, தங்களின் தெளிவான செயல்பாடுகளால் வேலை பளு குறையும். உற்றார், உறவினர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடனுதவிகள் கிட்டும். சுபகாரியங்கள் கை கூடும். அலுவலக பணிகளில், குடும்ப விவகாரங்கள் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தொழிலில் புதிய தொடர்புகள் ஏற்படும்.

விருச்சிகம்:

இன்று, அதிக அலைச்சல் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்படும். செலவுகள் அதிகமாகி நிதி நிலைமையில் நெருக்கடி ஏற்படும். அலுவலகத்தில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு செயல்படுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கூடும். வாகன வகையில் பராமரிப்பு செலவு கூடும்.

தனுசு:

இன்று, தங்களின் துணிந்த செயல்பாடுகள் பல பிரச்னைகளுக்கும் தீர்வு காண வழி வகுக்கும். வியாபாரத்தில் போட்டிகள் கூடும். சொத்துக்களால் அதிகப்படியான செலவுகள் ஏற்படும். நண்பர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு அகலும். உறவினர் ஒருவரின் வருகையும் அவரால், சிற்சில சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடும்.

மகரம்:

இன்று, தங்கள் மனதில் தேவையற்ற பயங்கள் மற்றும் கவலைகள் ஆக்கிரமிக்கும். இதனால் எடுக்கும் காரியங்களில் தடை தாமதம் இடையூறுகளை சந்திக்கலாம். வழக்குகளில் கூடுதல் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளி வைக்க வேண்டும். விருந்தினர்கள் வருகை சந்தோஷம் தரும்.

கும்பம்:

இன்று, வழக்கத்தை விட அதிகநேரம் ஓய்வெடுக்க நேரிடலாம். மேலும், பணிகளை கூட செவ்வனே செய்ய முடியாமல் திண்டாடலாம். நிதானம் தேவை. பழைய நண்பர் ஒருவருக்காக சில வேலைகளை மேற்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். தொழிலில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.

மீனம்:

இன்று, மகிழ்ச்சி கூடும் நாள். மனைவி, குழந்தைகள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தொழில் ரீதியான எந்தவொரு நடவடிக்கைகளிலும் அவசரம் காட்டாமல் நிதானமாக செயல்பட்டால் ஏமாற்றங்களில் இருந்து தப்பிக்கலாம். புதிய வீடு பற்றிய சிந்தனை மேலோங்கும். தெய்வ வழிபாடு மனநிறைவு தரும்.

Leave a Reply