இனி சினிமாவில் ‘தம்’ சீன்களுக்கு தடையில்லை… | WINYARL

இனி சினிமாவில் ‘தம்’ சீன்களுக்கு தடையில்லை…

57069,xcitefun-bppyt09oqnswpod28t69

சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விலக்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளது.

திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவதற்கு மத்திய அரசு தடை விதித்து இருந்தது.

நடிகர்களைத் தாண்டி, நடிகைகளும் ஏகாந்தமாக தம்மடிப்பது போல காட்சிகளை வைக்கும் அளவுக்கு முன்னேறிவிட்டதால், திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முன்னணி நடிகர் நடிகைகளும் கண்டித்தனர். ஆனால் தடை உத்தரவை நடைமுறைப் படுத்துவதில் உறுதியாக இருந்தது மத்திய அரசு.

நடிகர்கள் புகை பிடிப்பதை பார்த்து இளைய தலைமுறையினர் அப்பழக்கத்துக்கு அடிமையாவதால் அத்தகைய காட்சிகள் இடம்பெறக்கூடாது என அரசும் சமூக நல ஆர்வலர்களும் கூறினர்.

ஆனால் இப்போது தனது உத்தரவை மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றுள்ளது. கதைக்கு தேவை என்றால் புகை பிடிக்கும் காட்சியை வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. புகை பிடிக்கும் காட்சிகளை வைப்பதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

படம் துவங்கும் போது புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை இடம்பெறச் செய்யவேண்டும். இடைவேளை விட்டு படம் துவங்கும் போதும் இந்த வாசகம் இருக்க வேண்டும். புகை பிடிக்கும் காட்சி வரும் போதும் கொட்டை எழுத்தில் இந்த வாசகம் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இனிமேல் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதில்லை என 7 ஆண்டுகளுக்கு முன்பே முடிவெடுத்து அதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்!

Leave a Reply