இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி :இலங்கைத் தொடருக்கு சென்னையில் பயிற்சி!

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி :இலங்கைத் தொடருக்கு சென்னையில் பயிற்சி!

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது.

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற 21ம் திகதி நடைபெற உள்ளது.2 வது ஆட்டம் 24ம் திகதியும், 3வது போட்டி 28ம் திகதியும், 4வது போட்டி 31ம் திகதியும், 5வது மற்றும் கடைசி போட்டி ஆகஸ்ட் 4ம் திகதியும் நடைபெற உள்ளது.

இரு அணிகள் மோதும் டி20 போட்டி ஓகஸ்ட் 7ம் திகதி நடைபெற உள்ளது.

இலங்கை தொடருக்கான இந்திய வீரர்களின் பயிற்சி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

2 நாள் பயிற்சிக்கு பின்பு இந்திய அணி சென்னையிலிருந்து 18ம் திகதி இலங்கை புறப்பட்டு செல்கிறது. பயிற்சியின் போது வீரர்களுக்கு உடல் தகுதி தெரிவு நடைபெறும்.

இலங்கை தொடருக்கான இந்திய அணி விபரம்:

மஹேந்திர சிங் டோனி (அணித்தலைவர்), வீராட் கோஹ்லி (துணை அணித்தலைவர்), வீரேந்திர ஷேவாக், கவுதம் கம்பீர், அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா, சுரேஷ் ரெய்னா, மனோஜ் திவாரி, இர்பான் பதான், ராகுல் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், அசோக் திண்டா, ஜாகீர்கான், உமேஷ் யாதவ், பிரக்யான் ஒஜா.

Pin It

Leave a Reply