ஆணையும் பெண்ணையும் நிர்வாணமாக வீதியில் அழைத்துச்சென்ற பாகிஸ்தான் பொலிஸார்

முறையற்ற பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஓர் ஆணும் பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நிர்வாணக்கோலத்துடன் வீதியில் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.

மும்தாஸ் மிர்பார் எனும் வர்த்தகரும் பெண்ணொருவரும்  கடந்த 27 ஆம் திகதி சிந்துமாகாணத்தில் காம்பாத் நகரில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பலவந்தமாக நிர்வாண கோலத்துடன் வீதியில் அழைத்துச்செல்லப்படுள்ளனர்.

இக்காட்சியை பொலிஸாரும் பொதுமக்களும் தமது கமராக்களில் ஒளிப்பதிவு செய்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்ட பின்னர் ஆடைகளை அணிந்துகொள்வதை  பொலிஸார் தடுத்த காட்சிகள் அடங்கிய வீடியோவானது பிபிசியின் உருது இணையத்தளத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு சதித்திட்டத்தில் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி பெண் பொலிஸாரினால் அழைத்துவரப்பட்டதாகவும் மிர்பார் தெரிவித்துள்ளார்.

தான் இருவரும் சுமார் அறை கிலோமீற்றர் தூரத்திற்கு நிர்வாணமாக நடத்திவரப்பட்டதாகவும் பொலிஸார் உற்பட பலர் தம்மை படம்பிடித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீர்பார் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். அவர் சிந்து உயர்நீதிமன்றில் மனுவொன்றையும் தாக்கல் செய்துள்ளார்.; அம்மனு 8 ஆம் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

அவருடன் கைது செய்யப்பட்ட பெண் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரையும் பொலிஸாரால் நிர்வாணமாக அழைத்துச்செல்லப்படுவதை  தடுப்பதற்கு தாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் பொலிஸார் தமது பேச்சை செவிமடுக்கவில்லை எனவும் கம்பாத் பிரதேசவாசிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நபர்களுடன் மற்றுமொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் நிர்வமாணமாக அழைத்துச் செல்லப்படவில்லையென இது தொடர்பில் காம்பாட்டில் உள்ள அயலவரொருவர் தெரிவித்துள்ளார்.

பாலியல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்காக மிர்பார் தனது வீட்டுக்கு இரண்டு பெண்களை அழைத்துள்ளமை தொடர்பில் தமக்கு இரகசிய தகவல் கிடைத்ததாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியானதையடுத்து 3 பொலிஸார் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

You must be logged in to post a comment.